வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் மரம் மீது டிப்பர் மோதி இரண்டு மரங்கள் மற்றும் விளம்பரப்பதாதைகள் என்பனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த டிப்பர் மற்றும் சாரதியை வவுனியா பொலிசார் தடுத்துவைத்துள்ளதுடன் இரண்டு அழகுபடுத்தும் மரம் மற்றும் விளம்பரப்பதாதைகள் திருத்தி சீரமைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்டு நகரில் விலையுயர்ந்த அழகுபடுத்தும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (02.11.2023) அதிகாலை மணிக்கூட்டுக் கோபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ்.வீதியிலிருந்து கண்டி வீதி நோக்கிப் பயணித்த டிப்பர் வீதியில் அமைக்கப்பட்ட விளம்பர பதாதைகளை ஊடறுத்து கொண்டு இரண்டு அழகு படுத்தும் மரங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து டிப்பர் மற்றும் சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சேதப்படுத்தியவற்றை சீர்செய்து கொடுக்குமாறும் பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.