இளைஞர், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டி பொலன்நறுவையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
பொலன்நறுவையில் நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் வவுனியா கோமரசங்குள மகாவித்தியாலய மாணவிகள் மற்றும் வவுனியா பளுதூக்கும் கழக மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். குறித்த போட்டியில் க.அபிசாளினி மற்றும் பா.மதுசாளினி – 1ம் இடத்தையும் பா.கிசாளினி மற்றும் பா.செரோண்யா – 2ம் இடத்தையும் பெற்று வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர், ஞா.ஜீவன் அவர்களுக்கும் பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.