வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான அக்கராயன் பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா என்பவரே மரணமடைந்துள்ளார்
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.