முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வுகள் மிகவும் சிறப்புற நடைபெற்றன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (16.12.2023) இடம்பெற்றுள்ளது.
இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் சி. ஜெயகாந்த், சிறப்பு விருந்தினராக பிரதேச செயலக கணக்காளர் க. கடம்பசோதி அவர்களும் கலந்து சிறப்பித்து சாதனையாளர்களையும் அவர்களின் பயிற்றுனர்களையும் கெளரவமளித்தனர்.
இந் நிகழ்வில் சாதனை விளையாட்டு வீரர்கள் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.