புதிய இணைப்பு
வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் 330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 296 பேர் தேர்தல் களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் மகளிர் அணியின் செயலாளர், உப செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் எமது செய்தியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.