இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக இளம் அரசியல் தலைவரான இரா. சாணக்கியன் அவர்கள் நியமிக்கப்பட்டதனை வரவேற்று, அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் இன்று (05.02.2026) பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

“உங்கள் செயற்பாடுகள் சமூக நலனுக்கும் அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக அமையட்டும்” எனும் வாசகத்துடன் அமைக்கப்பட்ட குறித்த பதாதைகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டிருந்தன.

இந்த வாழ்த்து பதாதை நடவடிக்கைகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணியினரால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இளம் தலைமுறையின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான ஒரு முக்கிய அடையாளமாக இரா. சாணக்கியன் அவர்களின் இந்த நியமனம் அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர் மக்கள் நலன் சார்ந்த அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


