இலங்கை தமிழரசு கட்சிக்கான தலைமைப் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு; 21/01/2024, திருகோணமலை நகராட்சி மண்டபம்:
1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்: வாபஸ்
தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்
குறித்த கட்சியின் தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பிராக இருந்துவரும் இரா.சம்பந்தன் தலைமையில் அண்மையில் கொழும்பில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றிருந்ததுடன், இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு வருமாறும் அதற்கு 24 மணி நேர கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தலைமைப் பதவிக்கு போட்டியிடும் மூவரும் கலந்துரையாடிய போதிலும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கவில்லை. இந்நிலையிலேயே, தேர்தல் ஒன்றின் மூலம் தலைவரை தெரிவுசெய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் தேர்தல் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது.
.