யாழில் போதையால் வந்த விபரிதம்!! இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்(26 வயது) மரணம் தொடர்பில் நேற்று (24.01.2024) உடற்கூற்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஊசி மூலம் அதிகளவு போதை மருந்து ஏற்றியமையே இளைஞனின் மரணத்துக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, உயிரிழந்த இளைஞரின் உடலில் போதை ஊசி மருந்து ஏற்றிய அடையாளமும் காணப்படுட்டுள்ளதாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது

Latest news

Related news