இறுதி சுற்றில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அணி.  

யாழில் பதினொரு பேர் கொண்ட COMMANDERS CUP -2024 Friendship challenge Trophy Football Tournament போட்டியின் அரையிறுதி போட்டியானது நேற்றையதினம் (24.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

கஸ்துல் தலைமையிலான முல்லைமாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அணி எதிர் தனுசன் தலைமையிலான கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அணி போட்டியிட்டது.

 

விறுவிறுப்பாக இடம்பெற்ற முதல் பாதியாட்டத்தில் முல்லை மாவட்ட சம்மேளன அணிக்கு கிடைத்த தண்ட உதையை முல்லை மாவட்ட அணி தலைவர் கஸ்துல் கோலாக்கியிருந்தார்.

இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்ட வேளை 1:0 என்ற கோல் அடிப்படையில் முல்லை அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது பாதியாட்டத்தில் கிளிநொச்சி சார்பாக எட்வின் அவர்கள் ஒரு கோலை பெற்று கொடுக்க இரண்டு அணிகளும் வெற்றிக்காக தங்களது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தனர்.

இருந்த போதும் இரு அணிகளும் தலா ஒரு கோல்களை பெற்று 1:1 என்ற கோல்கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து இடம்பெற்ற சமநிலை தவிர்ப்பில் 3:1 என்ற கோல் அடிப்படையில் கிளிநொச்சி உதைபந்தாட்ட சம்மேளன அணி வெற்றியை தமதாக்கியது.

Latest news

Related news