மனைவியின் நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் மின்னேரியா பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் மின்னேரியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் நேற்று (8) மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீராடிக்கொண்டிருந்த போது கணவர் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர், அவர் அதனை உறவினர்களுக்கு அனுப்பியதாகவும் மனைவி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.