முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி.

முல்லைத்தீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி உள்ளது.

கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி S.H.மஹரூஸ் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

Latest news

Related news