வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் 52 பேர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 8 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி படுகொலைகள் தொடர்பில் சந்தேகத்தில் 129 பேர் கைதாகியுள்ளனர். இவர்களில் 38 பேர் மாத்திரம் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.