வவுனியாவில் இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள்

வவுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண் சட்டிகள் மற்றும் சிரட்டைகளை பயன்படுத்தி இளைஞர்களினால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெப்ப காலத்தில் பறவைகள், விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் உன்னத கடமையில் குறித்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இளைஞர்களின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.   

Latest news

Related news