வவுனியா பிரதேச சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தெற்காசியாவில் மிகப்பெரிய இளைஞர் அமைப்பான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினுடைய
வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் இன்றைய தினம் 23.04.2024 அன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
சம்மேளனத்தின் தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் ஏக மனதாக இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செயலாளர் இளைஞர் சேவை அதிகாரி ஜெஸ்மின், பொருளாளர் ஜெ.சஞ்சை, உபதலைவர் வி. சஞ்சீவன், அமைப்பாளர் A.R.M ஜசித், உப செயலாளர் M. வளர்மதி, உப அமைப்பாளர் S. ஜெனிபர், விளையாட்டு க. புனிதமராஜன், கலாசாரம் M. மிதுஷன், முயற்சியாண்மை V. கோபிகா, ஊடகம் மற்றும் தகவல் J.தன்ஷிகா, தேசிய சேவை R.திலக்சன், கல்வி பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல் M. மதுஷன், நிதி J.கஜீசன், சூழல் பாதுகாப்பு M.திசோபன், கணக்காளர் அ.அனுஷா மற்றும் ஒழுக்காற்று குழுவினராக A.லக்சா, S.விருட்சிகா, J.லக்சிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்.