வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது நேற்று (25.04.2024) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலம்புரி விடுதியில் காலை 10 மணியளவில் சங்கத்தின் தலைவர் Dr.B.சக்திக்குமரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஸ்தாபகர் Dr.A.சக்திவேல் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தாய்ச்சங்கத்தின் செயலாளர் Dr.N.T.ஹேவாகம, உபதலைவர் Dr.J.A.S.சாமர ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.
மேலும் 2024 ம் ஆண்டுக்குரிய செயற்குழு தெரிவு இடம்பெற்றதோடு வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக Dr.M.முரளிதாஸ் அவர்களும் புதிய செயலாளராக Dr. S. சுகிர்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.