நாட்டால் பாடல்களின் தொகுப்பு இறுவட்டு வெளியீடு (வீடியோ)

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் நாட்டால் பாடல்களின் தொகுப்பு இறுவட்டு வெளியீட்டு விழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் முழவம் கலையகத்தினால் அமரர் கந்தப்பிள்ளை சண்முகத்தினால் தாெகுக்கப்பட்ட நாட்டார் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு விழா நேற்றையதினம் (27.04.2024) மாலை 4 மணியளவில் குமுழமுனை மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கலாபூஷணம் அமரர் . கந்தப்பிள்ளை சண்முகத்தின் பேரன் பாலகாந்தன் பாலபிரசன்னாவால் பாடல் பாடி இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் , சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் புஸ்பநாதன், ஓய்வு நிலை உப பீடாதிபதி பார்த்தீபன், சட்டத்தரணி ச.தனஞ்சயன் ,ஓய்வு நிலை இராணுவ மேஜர் ஜெனரல் சூரிய பண்டார, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் ஜெயவீரசிங்கம், பிரிகேடியர் சமிண்ட ஆராச்சிக்கே, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் , கலைஞர்கள், மாணவர்கள் ,பொதுமக்கள், கிராம மட்ட பிரதிநிதிகள் ,கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Latest news

Related news