வடமாகாண ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி சாதனை 

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட முள்ளி/வித்தியானந்தா கல்லூரி உள்ளரங்கில் குறித்த போட்டி நடைபெற்றிருந்தது.

வவுனியா மாவட்டம் ஆண்கள் அணி சார்பில் 5 தங்கம் , 1வெள்ளி , 5 வெண்கலம் பெற்று முதலிடத்தையும், பெண்கள் அணி சார்பில் 4 தங்க பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பயிற்றுவிப்பாளர் நிக்சன் ரூபராஜ் நெறிப்படுத்தலில் இவ் வீர வீராங்கனைகள் தயார்படுத்தப்பட்டு குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

Latest news

Related news