குருந்தூர்மலையில் பொலிஸ் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடராக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்றையதினம் (18.06.2024) காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news