2024ஆம் தேசிய மட்ட இளையோருக்கான போட்டி 2024.07.13 முதல் 2024.07.16 வரை தியாகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில் 18 வயது ஆண்கள் பிரிவில் சம்மட்டி எறிதல் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் ம. வி இல் கல்வி கற்கும் கி. சுபிஸ்கரன் 36.60 மீட்டர் எறிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
கி. சுபிஸ்கரன் முன்பிருந்த சாதனையை முறியடித்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியதோடு, வட மாகாணத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். இப்போட்டியில் மூன்று இடங்களையும் வட மாகாண மாணவர்களே வென்றுள்ளனர். இவை வன்னி மாணவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பின் சான்றாகும்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பயிற்சியாளர் ச.ஜெனோஜன் அவரது மூலமான சிறப்பான பயிற்சியின் மூலம் கி.சுபிஸ்கரன் இந்த அரிய சாதனையை அடைந்துள்ளார்.
இது போன்ற சாதனைகள் இளைஞர்களுக்கு உந்துதல் அளிக்கும் விதமாக திகழ்கின்றன. கி. சுபிஸ்கரனின் வெற்றியும் அவரது பயிற்சியாளரின் அர்ப்பணிப்பும் ஏனைய மாணவர்களுக்கு மிகுந்த முன்மாதிரியாக திகழ்கின்றன.