ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் மாங்குளம் கிழவன் குளத்தில் இன்று (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச அவர்களின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலய திறப்பு விழாவானது திருமுறிகண்டி வட்டார வேட்பாளர் சுப்பையா திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது
நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் முத்துக்குமாரசுவாமி லக்சயன் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்களான சதாசிவம் சத்தியசுதர்சன் , றிசாம் ஜமால்டீன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்