வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீத 71.76வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 நேற்று 137வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை தபால் மூல வாக்குகள் 3515வாக்குகளுடன் மொத்தமாக 62,358வாக்குகள், 71.76வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டசெயலர் அ.உமாமகேஸ்வரனின் தகவலின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 86ஆயிரத்து 889விக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 137வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பச் செயற்பாடுகள் இடம்பெற்றதுடன்,
1,506 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை 500பொலிசார் தேர்தல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் 137 வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிப்பதற்கு 38 கண்காணிப்பு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு காலை. 07.00மணிக்குத் தொடங்கிய வாக்களிப்புச்செயற்பாடுகள், மாலை 4.00மணிக்கு முடிவுற்றதும் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்தியநிலையமான முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தொடர்ந்து முல்லைத்தீவு மகாவித்தியாலய வாக்கெண்ணும் மத்தியநிலையத்தில் அமைந்துள்ள எட்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.