தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

இன்றையதினம்(22.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 216.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதிஇதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 388.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Latest news

Related news