மன்னார் வேட்டையான்முறிப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (31.10.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான டினேசன் தன்னுடைய அலுவலகத்தை திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
வேட்டையான்முறிப்பில் மக்களுடைய முழுமையான ஆதரவின் பேரிலே குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த வேட்பாளர் டினேசன், சுயேட்சை குழுக்களுக்கு வாக்களிப்பது தமிழர்களுடைய வாக்கானது சிதறப்பட்டு தமிழர்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாது போகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. சுயேட்சை குழுக்களுக்கு உறவினர்கள், ஊரார்கள், சகோதரர்கள் நிற்கின்றார்கள் என நீங்கள் வாக்களிப்பது தமிழர்களுக்கு செய்கின்ற துரோகமாக அமையும் என இதன் போது தெரிவித்திருந்தார்