வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீட்டுவளாகத்திற்குள் முதலை ஒன்று வந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
வவுனியாவில் பருவமழை ஆரம்பித்துள்ளதுடன் கடந்தசில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் பூந்தோட்டம் பகுதியில் உள்ள காணி ஒன்றிற்குள் சுமார் நான்கடி நீளம் கொண்ட முதலை ஒன்று மாலை நேரம் உள்நுளைந்துள்ளது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளரால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் குறித்த முதலையை அங்கிருந்து அகற்றியிருந்தனர்