தமிழ்த்தேசியத்தின் பின்னடைவு! இளைஞர்களை புறந்தள்ளியமையால் வந்தது!! மயூரன்!  

தமிழ்த்தேசிய பின்னடைவிற்கும் மக்கள்நம்பிக்கை இழந்தமைக்கும் இளைஞர்களை புறந்தள்ளியமையே காரணம் என தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன் தமிழ்த்தேசியத்தின் பால் சிதைந்துபோன நம்பிக்கையை இளைஞர்களால் மாத்திரமே கட்டிஎழுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….

தமிழ்த்தேசிய அரசியலில் அதிருப்திஅடைந்து அதன்மீதிருந்த நம்பிக்கையினை இழக்கும்நிலைமை தமிழ்மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கமானது தமிழ்த்தேசிய அரசியலின்பால் அக்கறை கொண்டிருந்தமக்கள் இன்றுசலுகை அரசியலைபேசும் கட்சிகளோடும், தேசியகட்சிகளுக்கு பின்னாலும் அணிதிரள்கின்ற துர்பாக்கியநிலயை ஏற்ப்படுத்தியுள்ளது.இந்த நிலை ஆபத்தானது. இதனை யார் மாற்றுவது.

உண்மையில் தமிழர் அரசியலில் தற்போது ஏற்ப்பட்டுள்ள தொய்வுநிலைக்குக்கும் அவநம்பிக்கைகளுக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பினை வழங்காமல் புறந்தள்ளியமையே பிரதான காரணமாகஅமைந்துள்ளது. தமிழ்மக்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இருந்து அல்லது அந்த பயணத்தில் இருந்து தடம்மாறுவதானது எமது தாயக கோட்பாட்டையும்,சுயநிர்ணயஉரிமையையும் மறுதலிக்கின்றமைக்கு ஒப்பானதாகும்.

எனவே தமிழ்தேசியத்தை பாதுகாத்து தமிழர் தாயககோட்பாட்டை நிலைநிறுத்தி அதனை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்வதற்கான பணியினை இளைஞர்களால் மாத்திரமே செய்யமுடியும். எனவே இளைஞர்களுக்கு ஆணையைதாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம். தமிழ்த்தேசியத்தின்பால் சிதைந்துபோன நம்பிக்கையை நாங்கள் கட்டிஎழுப்புகின்றோம்.

தேசவிடுதலைக்காக எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள் தங்களை ஆகுதிஆக்கினார்கள்.அந்த வழியில் வளர்ந்தநாங்கள் இனவிடுதலைபோராட்டத்தை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்வதற்கு எம்மையே அர்ப்பணிக்கத்தயாராக இருக்கின்றோம்.

அது நடந்தால் மட்டுமே உரிமை அரசியலை புறந்தள்ளி, சலுகைஅரசியலை பேசுகின்றகட்சிகளோடு எமது மக்கள் செல்கின்ற நிலையினை மாற்றமுடியும்.

எனவே அன்பானமக்களே இம்முறை தேர்தலில் இளைஞர்களை ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்றுக்கு அனுப்புங்கள். தமிழ்த்தேசிய உரிமை போராட்டத்திற்கு பின்னால் தமிழர்தேசம் இதயசுத்தியுடன் அணிதிரளக்கூடிய ஒரு நிலையினை அந்த இளைஞர்களின் திரட்சி நிச்சயம் ஏற்ப்படுத்தும் என்றார்.

Latest news

Related news