4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த மருதானையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரின் கைப்பையில் சுமார் 5 கிலோ குஷ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.