கொழும்பில் தந்தையின் கவனயீனத்தால் உயிரிழந்த பெண் குழந்தை

கொழும்பில் தந்தையின் கவனயீனம் காரணமாக அவரின் மகளான சிறுமி உயிரிழந்துள்ளார்.

 

மருதானையில் வீட்டுக்கு முன்னால் ஜீப் வாகனமொன்றை தந்தை நிறுத்த முயற்சித்த போது இந்த விபத்து நேற்று ஏற்பட்டுள்ளது.

தந்தை வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது ஜீப்பின் பின்னால் இருந்த 3 வயதுக் குழந்தை வாகனத்தின் அடியில் சிக்குண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news