ஊழலை ஒழிப்பதற்கு அனுர அரசை பலப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சங்கரலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அனுரகுமார அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கான கடமை இடதுசாரிகளாகியாகிய எமக்கு இருக்கிறது. இம்முறை மக்களிடம் எமக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.
மக்களுக்கு இன்று பாரிய பிரச்சனைகள் இருக்கிறது. கிராமங்களின் உட்கட்டுமான தேவைகள் அதிகரித்துள்ளது. மீனவக் குடும்பங்கள் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். பல குடும்பங்கள் ஒருநேர உணவை உண்ணுவதே கடினம் என்ற ஒரு நிலை ஏற்ப்பட்டுள்ளது.
எனவே ஊழலற்ற அனுரவின் ஆட்சியை பலப்படுத்துவதே எமது நோக்கம். எமது சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளையும அனுரவிற்கான வாக்குகளாக கருதுங்கள். இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சி நடக்கின்றது. அதற்கு நாம் அடிபணியாமல் அதனை பாதுகாக்கவேண்டும்.
அந்தவகையில் அனுபவம் உள்ளவர்களை இம்முறை நாம் களம் இறக்கியுள்ளோம். சுவர்க்கடிகார சின்னத்தில் வன்னியில் போட்டியிடும் நாம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆசனங்களை பெறுவோம். என்றார்.