ஆரோக்கியமான அரசியல் பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றிகள். மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும் என கோடாரி சின்ன முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் கோடாலிச் சின்னத்தில் போட்டியிட்டு 8 ஆவது இடத்தை பெறறுக் கொண்டோம். 48 அணிகள் போட்டியிட்ட நிலையில் மக்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பின் காரணமாக 8 ஆவது .டம் கிடைக்கப் பெற்றது. ஆகவே எங்களை வரவேற்ற, எங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
தொடர்ந்தும் நான் உங்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வேன். மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் மிகவும் சவாலான நேரத்தில் தான் நாங்கள் உங்களிடம் வந்தோம். பொதிகள், சாராயம் கொடுக்கும் இந்த கலாசாரத்தை விலக்கி ஒரு ஆரோக்கியமான அரசியலை மக்களிடம் கொண்டு சென்றோம்.
அந்தவகையில், மக்கள் எம்மை ஏற்றுக் கொண்டு வாக்களித்துள்ளார்கள். இதனால் நாம் 7,484 வாக்குகளை வன்னியில் பெற்றோம். தபால் மூல வாக்கில் 639 வாக்குகளைப் பெற்று 5 இடத்தைப் பிடித்தோம். ஆகவே வாக்களித்த மக்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள். மக்களுக்கான எமது அரசியல் பயணம் தொடரும் எனவும் தெரிவித்தார்.