வன்னித் தேர்தல் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின்சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெறியீட்டிய துரைராசா ரவிகரனை நவம்பர்.17 இன்று முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தினர் கௌரவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்குப்பதியிலுள்ள துரைராசா ரவிகரனின் வீட்டில் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
அந்தவகையில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள ரவிகரன் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், வீட்டுச்சின்னமும், இலக்கம் மூன்றும் வடிவமைக்க நினைவுச்சின்னம் ஒன்றும் செவிப்புலனற்றோர் சங்கத்தினரால் இதன்போது கையளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.