அருட்தந்தை சத்தியராஜ் ரவிகரன் எம்.பி சந்திப்பு : மன்னாரில் உள்ள பாரிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாய்வு 

மன்னார் – பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தின் அருட்தந்தை சத்தியராஜ் மற்றும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் நேற்று (25) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச்சந்திப்பில் மன்னார் மாவட்டத்தில் மிகப் பாரிய பிரச்சினைகளாகவுள்ள இல்மனைட் அகழ்வு மற்றும், காற்றாலைத் திட்டம் தொடர்பில் அதிக கவனஞ்செலுத்துமாறு அருட்தந்தை சத்தியராஜ் அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தன்னால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அருட்தந்தை சத்தியராஜ் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆசிபெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news