முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 143 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 56 குடும்பங்களை சேர்ந்த 193 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்களை சேர்ந்த 153 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று மாலை வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இடர் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிசார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.