வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்து பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்பட காரணமாக அமைந்தது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (28.11) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னியில் அதிக இடங்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கு வடிகாலமைப்பு சீரின்மையே காரணம். இந்த விடயத்தில் உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தரப்பால் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது அவர் தெரிவித்திருந்தார்.