வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள் 

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகள் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாததனால் அண்மைய மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றதோடு குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பாலமும் சீராக அமைக்கப்படவில்லை . இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு, நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வாழுகின்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த வீதி 50 வருடங்களுக்கு மேலாக சீரின்றி காணப்படுவதோடு அவசர நிலமைகளின் போது கூட பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகளில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மட்டுமல்ல ஏனைய காலங்களிலும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது. இதனால் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பல வருடமாக இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக குறித்த கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை. குறித்த பகுதி வீதியில் அதிகமாக மாற்றுதிறனாளிகள், சிறுவர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் அவசர மருந்து தேவைக்கோ, பாடசாலைக்கு கூட பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே எமது வீதிகளை பிரதேச சபையோ, மாவட்ட செயலகமோ, தற்போதுள்ள அரசாங்கமோ கவனத்தில் எடுத்து அதனை புனரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

Related news