பல வருடங்களாக பாவனையற்று இயங்காத நிலையில் இருந்த நெற்களஞ்சியசாலை இயங்கவைக்க இராணுவத்தின் துரித செயற்பாடு

புதுக்குடியிருப்பில் பல வருடமாக இயங்காதிருந்த நெல் களஞ்சியசாலையை இயங்க வைக்கும் நோக்கில் இன்றையதினம் (20.01.2025) இராணுவத்தினால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெல் களஞ்சியசாலையானது கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்பட்டிருந்தது.

இதனால் பல சமூக சீர்கேடுகள், சட்ட விரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால் குறித்த இடத்தினை இராணுவத்தின் ஏற்பாட்டில் நெல் கொள்வனவை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் இன்றையதினம் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள 593 படைப்பிரிவின் 59 பிரிவிலுள்ள இராணுவத்தினரால் குறித்த துப்பரவு பணி இடம்பெற்று கோம்பாவில் கமக்கார அமைப்பின் செயலாளர் ஏ.பிரதீபராசாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

Latest news

Related news