இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சாரணர்கள் Clean Sri Lanka என்ற செயற்றிட்டத்தினை தொனிப்பொருளாக கொண்டு நேற்று (2025.02.04) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இருந்து வவுனியா புதிய பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வானது வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர் யோ. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் சமுதாய பொலிஸ் பொறுப்பதிகாரி, உதவி மாவட்ட ஆணையாளர்கள், பாடசாலை சாரணர் தலைவர்கள், பொறுப்பாசிரியர்கள், திரி சாரணர்கள், சாரணர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்