மரக்கடத்தல் முறியடிப்பு. கப்ரக வாகனத்துடன் சாரதி கைது.

கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் அறுக்கப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்த தேக்குமரக்குற்றிகளை கைப்பற்றியதோடு, வாகன சாரதி ஒருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு வி காட்டுப்பகுதியில் மரக்கடத்தத்தல் இடம்பெறவுள்ளதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று (10.02.2025) அதிகாலை புதுக்குடியிருப்பு நோக்கி கொண்டு செல்ல தயாராக இருந்த நிலையில் 11 தேக்கு மரக்குற்றிகளை பொலிஸ் கொஸ்தாபல்களான (93534) தினேஸ், (94860) றொக்ரிகோ, (22253) குளாஸ் ,(1821) றுக்சான், (99687) பண்டரா ஆகிய குழுவினரால் கைப்பற்றப்பட்டு குறித்த மரக்கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதுடைய வசந்தபுரம் மன்னாகண்டலை சேர்ந்த சாரதி ஒருவர் கப்ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர் .

Latest news

Related news