முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பிரதமர் ஹரினி அமர சூரிய

இலங்கையின் பிரதமர் ஹரினி அமர சூரிய முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்

இன்று (16) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்திற்கு வருகைதந்த பிரதமர் அங்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்

அங்கு உரை நிகழ்த்திய பிரதமர் தமது அரசாங்கத்தில் அதிகளவான பெண்கள் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் உள்ளதாகவும் தங்களது கட்சி சார்பிலேயே அதிகளவான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் உள்ள பெண் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

அத்தோடு கல்வி விவசாயம் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமது அரசாங்கத்தில் மக்களுக்கான நியாயமான தீர்வுகள் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தங்களுடைய கட்சியின் தலைவர் உரிய யோசனைகளை முன்வைத்து அதற்கேற்ற வகையிலே மக்களுக்கான சேவைகளை செய்வார் எனவும் தெரிவித்திருந்தார்

Latest news

Related news