முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (18.02.2025) காலை ஈடுபட்டிருந்தனர்.

ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ கொமண்டர் மேஜர் கே.என்.சி.டீ.சில்வா அவர்களின் தலைமையில் ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவத்தினர் , பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில்
clean srilanka திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சுத்தப்படுத்தும் பணியில் கிராம மக்கள், ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவத்தினர் இணைந்து சுத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.































