ஒட்டுசுட்டானில் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பொதுசுகாதார பரிசோதகர்களால் முற்றுகை.

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பகுதியில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில்  இருந்த வெதுப்பக உற்பத்தி பொருட்கள்  சுகாதார பரிசோதகர்களால்  அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (15.04.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு மற்றும் ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் உள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள்  இன்றையதினம் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களில் அடையாளம் காணப்பட்ட  மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் இருந்த வெதுப்பக உற்பத்திப்பொருட்கள், அழிக்கப்பட்டதுடன், குறித்த பகுதி வெதுப்பகங்களில் உள்ள சுகாதார சீர்கேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றுக்கான உரிய தீர்வுகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் முன்மொழியப்பட்டன. அத்துடன் உரிய வெதுப்பக உரிமையாளருக்கு சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news