முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.
தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது.
கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய சங்கரப்பிள்ளை சசிகலா என்ற பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
