புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல் விழா சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மன்னாகண்டல் 3ம் பிரதேசத்தில் இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல்விழா இன்றையதினம் (25.07.2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இயந்திரம் மூலம் வரிசையாக நாற்று நடப்பட்டிருந்தது, இரசாயன பீடை நாசினிகள் பயன்படுத்தப்படவில்லை, அதிகளவான மட்டம் வெடித்து அதிகளவான விளைச்சலை பெற முடியும், களை நெல்லுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியது பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும், விதை நெல்லின் அளவு குறைவு போன்ற பல நன்மைகளை குறித்த செய்கையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மந்துவில் போதனாசிரியர் புவிராஜசிங்கம் பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அறுவடை நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருபவதனி சிவதீபன், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் விவசாய நிபுணர் க.வசந்தன், முல்லைத்தீவு மாவட்ட பாடவிதான உத்தியோகத்தர் இளங்கீரன், மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி கேமா கமலதீபன், கிராம சேவையாளர் கஜகோகுலன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.