வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை(Boxing) போட்டியில் பதக்கங்களை பெற்று துணுக்காய் கல்வி வலய முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
மாகாண கல்வி திணைக்களத்தினால்2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் 12,13/8/2025 இல் நடத்தபட்ட குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்கள் பெற்று முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை விளையாட்டு வரலாற்றில் முதற் சாதனையாக தனுஷியா, பவித்திரன், தேனுஜா தங்க பதக்கத்தினையும், குணாளன், பவியரசி வெண்கல பதக்கத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த மாணவர்களுக்கு பயிற்சிகளை கா.நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்ரர்) வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.