மக்களுக்கு சிறந்த சேவைகளை புரிந்த கிராம சேவையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு.

தேவிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ள கிராம அலுவலகர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.

தேவிபுரம் கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வானது தேவிபுரம் “அ”பகுதி பொதுநோக்கு மண்டப வளாகத்தில் நேற்றையதினம் (25.08.2025) மாலை இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் தேவிபுரம் கிராமத்தில் கிராம அலுவலர்களாக சேவையாற்றி தற்போது இடமாற்றம் பெற்று சென்ற கிராம சேவையாளர்களின் சேவை நலனை பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் றேடியன் முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பின்னர் கிராம சேவையாளர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் பிரதம மற்றும் கௌரவ விருந்தினர்களுக்கான நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்) தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் விஜயகுமார் இராசரட்ணம் ,சிறப்பு விருந்தினர்களாக நிர்வாக கிராம அலுவலகர் க.தமிழ்ச்செல்வன் , கிராம அலுவலகர் திருநாவுக்கரசு உமாஜிதன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுரேஸ் ,பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ச.சதாகரன், தேவிபுரம் கிராம அலுவலகர் ந.பிரசாந், தேவிபுரம் சமுர்த்தி உத்தியோகத்தர் இ.ஜினேஸ் மற்றும் கிராம மக்கள், சமுக செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Latest news

Related news