புதுக்குடியிருப்பு பிரதேசசபை வளாகத்தில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவு அஞ்சலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில், தாயக செயலணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனிக்கான அஞ்சலி நிகழ்வு  இன்றையதினம் (25.09.2025) இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே. கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 38 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
தாயக செயலணியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அஞ்சலியினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டு, நாளை மன்னார் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

Related news