ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க மாணவர்கள் அணிவகுத்து வந்த சிறுவர் தின கொண்டாட்டம். முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்கள் 

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்றையதினம் (01.10.2025) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிலதா அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.

சிலாவத்தை சந்தியில் இருந்து பாடசாலை வளாகம் வரை ஆசிரியர்களின் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாணவர்கள் பாடசாலைக்கு அணிவகுத்து அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற சிறப்புரைகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு கலைப்பாடல்கள், பாடசாலையின் பெயருடன் சிறுவர் தினம் பொறிக்கப்பட்ட அடையாள சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை சிறுவர் தின கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தன.

Latest news

Related news