தேவிபுரத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – கோடா, கசிப்புடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்றையதினம் (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி G.W.M.J.S. குணசேகர அவர்களின் தலைமையின் கீழ் செயற்பட்ட பொலிஸார் இந்த சோதனையில், 8 வரல்களில் 1280 லீற்றர் கோடா, கான்களில் தயாரிக்கப்பட்ட 100 லீற்றர் கசிப்பு, மேலும் சுருள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேவிபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 03.03.2025 அன்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest news

Related news