முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் தேசிய மட்டத்தில் சிறந்த சாதனைகளை படைக்க யூடோ பயிற்சி முகாம்.

முல்லைத்தீவு மாவட்ட வீரர்களின் யூடோ விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் 15,16 ஆகிய இரு தினங்களில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் 2 நாள் யூடோ பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாம் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன், வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் தேசிய யூடோ பயிற்றுவிப்பாளர் ஜயவர்தன மாவட்ட யூடோ வீரர்களுக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்வில் வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் சிரேஸ்ட தலைமைபீட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் சதானந்தன் பிரதம விருந்தினராகவும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்துரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 யூடோ வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த பயிற்சி முகாம் எதிர்காலத்தில் மாவட்ட யூடோ வீரர்கள் தேசிய மட்டத்தில் சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Latest news

Related news