உடையார்கட்டில் குழந்தை பிள்ளையுள்ள 106 குடும்பங்களுக்கு பால்மா வழங்கி வைப்பு 

உடையார்கட்டில் குழந்தை பிள்ளையுள்ள 106 குடும்பங்களுக்கு இன்றையதினம் பால்மா வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், கனடா வன்னி சங்கத்தின் நிதி பங்களிப்புடன் குழந்தை பிள்ளையுள்ள 106 குடும்பங்களுக்கு பால்மா வழங்கும் திட்டம் இன்றையதினம் (04.02.2026) நடைபெற்றது.
குழந்தை பிள்ளையுள்ள குடும்பங்களின் ஊட்டச்சத்து தேவையை கருத்தில் கொண்டு இந்த மனிதநேய உதவி திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே.கரிகாலன், உடையார்கட்டு கிராம சேவையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன் வளர்மதி, மகளீர் அமைப்பு இணைப்பாளர் தீபன் அனுஸ்ரியா, கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், தாய்மார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறான சமூக நலன் சார்ந்த திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

Latest news

Related news