புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் அமைந்துள்ள மீன்சந்தை, இறைச்சிக் கடைகள், பழக்கடைகள் மற்றும் மரக்கறி கடைகள் மீது புதுக்குடியிருப்பு சுகாதாரப் பரிசோதகர்களால் இன்றையதினம் (13.02.2026) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சோதனையின் போது அழுகிய நிலையில் இருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த பழங்கள் மற்றும் மரக்கறிகள் சில கடைகளில் கண்டறியப்பட்டன. இதனையடுத்து உணவுப் பொருட்களை சுத்தமான முறையில் விற்பனை செய்ய வேண்டுமெனவும், இதுபோன்ற குறைபாடுகள் மீண்டும் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு சுகாதாரப் பரிசோதகர்கள் , பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய திடீர் சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியான முறையில் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



